காதலே உன்னை கவிதை என்பேனா
Monday, June 29, 2020
Sunday, June 28, 2020
இறைவாழ்த்து
முத்தமிழ் அருளிய
முக்கண்ணன் முதல்வனே
நற்றமிழோடு நற்குணம்
நல்கும் நாயகனே
யார் பிள்ளை இவனென
வியக்கும் வாழ்வருளும்
பிள்ளையாரே...
ஊனுடைத்து எழுதிய
எழுத்துலகின் வித்தானவனே
பொன்னியை காவிரியாக்கிய
காவியத் தலைவனே
அரங்கனை கொள்ளிடக்கரை
அமர்த்திய ஐந்துகரத்தோனே
உச்சியில் உறைந்து
உய்விக்க வந்தோனே
இதயமத்தியில் இருத்தி
இருகரம் கூப்பி
அழைக்கிறேன்
இம்மை இருளகற்றி
மறுமை இல்லா
மோட்சமாய்
மலராய் மணமாய்
அருகாய் அருள்வாய்
அழகின் மூத்தோனே...
Subscribe to:
Posts (Atom)
நதியரசியும் கடலரசனும்
நதியரசியும் கடலரசனும் மங்கையிவள் மன்னனுடன் ஊடல் கொண்டே அண்ணணாம் ஆதவனுடன் கிளம்பிச் சென்றாள் மன்னனைப் பிரிந்ததாலே மாண்பும் மங்கியது மரியாதையு...
-
நதியரசியும் கடலரசனும் மங்கையிவள் மன்னனுடன் ஊடல் கொண்டே அண்ணணாம் ஆதவனுடன் கிளம்பிச் சென்றாள் மன்னனைப் பிரிந்ததாலே மாண்பும் மங்கியது மரியாதையு...
-
முத்தமிழ் அருளிய முக்கண்ணன் முதல்வனே நற்றமிழோடு நற்குணம் நல்கும் நாயகனே யார் பிள்ளை இவனென வியக்கும் வாழ்வருளும் பிள்ளையாரே... ஊனுடைத்து எழு...
